மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

சொகுசு ரயில் பெட்டிகள் அறிமுகம்!

சொகுசு ரயில் பெட்டிகள் அறிமுகம்!

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரயில் பெட்டிகளை முதல் முறையாகத் தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் செல்வதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. ரயிலில் பயணிகளின் வசதிக்கேற்ப பொது வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு எனப் பல பிரிவுகளில் பெட்டிகள் உள்ளன. இதில் முதல் வகுப்புப் பெட்டிகள் அதிக சொகுசு வசதிகள் உடையதாக இருக்கும். முதல் வகுப்பைவிடக் கூடுதல் வசதிகள் கொண்ட அனுபூதி பெட்டியைத் தெற்கு ரயில்வே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அனுபூதி என்றால் இந்தியில் ‘புதிய அனுபவம்’ என்று அர்த்தமாகும். இந்தப் பெட்டி சென்னை சென்டிரல்-மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதிக இடவசதி, 56 தானியங்கி சொகுசு இருக்கைகள் மற்றும் இருபுறமும் தானியங்கி கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்தனியாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, தானியங்கி கழிவறைகள், எல்.இ.டி. விளக்குகள், தனித்தனியாகப் படம் மற்றும் பயண வரைபடங்கள் பார்க்க ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் எல்.சி.டி. டி.வி, ரயில் பணியாளர்களை அழைக்க அழைப்பு மணி, தனித்தனியாகச் சிற்றுண்டி மேஜை, ஜி.பி.எஸ். அடிப்படையில் பயணிகளுக்கு ரயில் நிறுத்தம் குறித்த தகவல் உள்ளிட்டவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018