மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

சிவகார்த்தியின் பாலிவுட் டச்!

சிவகார்த்தியின் பாலிவுட் டச்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `வேலைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிபடிப்பு தற்போது தென்காசியில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடமும், சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா கபூருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தையும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 12 ஜன 2018