மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

குட்கா விவகாரம்: திமுக வழக்கு!

குட்கா விவகாரம்: திமுக வழக்கு!

குட்கா ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்துவந்த தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத் தலைவராக இருந்த ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஜெயக்கொடி. குட்கா ஊழல் தொடர்பான வழக்கையும் இவர்தான் விசாரித்து வந்தார். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் பாராட்டப்பட்டவர். இந்த நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு கடந்த புதனன்று அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் சட்டப் பேரவையிலேயே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். குட்கா ஊழல் வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக டிஜிபி ராமானுஜம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையைத் திசை திருப்பும் முயற்சி இது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயக்கொடி அப்பதவியிலிருந்து மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று (ஜனவரி 11) வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திமுக சட்டப்பிரிவு செயலாளரான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018