மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

வெங்காயம் விலை உயர்வு!

வெங்காயம் விலை உயர்வு!

சில்லறை விற்பனையில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.60 ஆக அதிகரித்துள்ளது

தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற முக்கிய பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. சென்னையில் கிலோ ஒன்றுக்கு ரூ.45 ஆக விற்கப்படுகிறது. இதைப்போலவே சிறு நகரங்களிலும் வெங்காயம் விலை சற்று உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை செயலாளர் எஸ்.கே.பட்நாயக் கூறுகையில், “இந்த விலை உயர்வு தற்காலிகமானது. இந்த சிறிய ஏற்ற இறக்கங்கள் வர்த்தகர்களால் நடைபெறுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிடக் குறைவான அளவிலேயே வெங்காயம் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டுத் தேவைக்குப் போதுமான அளவுக்கு வெங்காயம் உற்பத்தியாகும்” என்றார்.

வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு வேளாண் பருவமான 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான காலத்தில் வெங்காய உற்பத்தி 2.14 கோடி டன்னாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய வேளாண் பருவ ஆண்டை விட 4.5 சதவிகிதம் குறைவாகும். கடந்த வேளாண் பருவ ஆண்டில் 2.24 கோடி டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018