மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஆதாரின் விர்ச்சுவல் ஐடி: சிதம்பரம் கண்டனம்!

ஆதாரின் விர்ச்சுவல் ஐடி:  சிதம்பரம் கண்டனம்!

ஆதார் ரகசியங்களைப் பாதுகாக்க மெய்நிகர் (விர்ச்சுவல்) அட்டை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இது குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டுவது போன்ற நடவடிக்கையாகும்’ என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 90 சதவிகிதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆதார் மூலமாகச் சேகரிக்கப்படும் விவரங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. வெறும் 500 ரூபாய் செலவில் ஆதார் தகவல்கள் வெளியே கசிவதாக மும்பையைச் சேர்ந்த ‘தி ட்ரிபியூன்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து புதிய மெய்நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையைத் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஆதார் அட்டை வைத்துள்ளவர்கள் ‘உதய்’ இணையதளத்தில் சென்று 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டால், அதற்குப் பதிலாக 16 இலக்க தற்காலிக எண்ணை (ரேண்டம் நம்பர்) பெற்றுக்கொள்ளலாம். இதை சிம் கார்டு, வங்கிக் கணக்கு தொடங்க என அனைத்துக்கும் தரலாம். இதன்மூலம் தனி நபரின் ஆதார் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று உதய் அமைப்பு கருதுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்டாயத்தின் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காகவும் பகிர்ந்து கொண்டுவிட்டனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018