மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

புத்தகக் காட்சி: மின்னம்பலம் வெளியீடுகள்!

புத்தகக் காட்சி: மின்னம்பலம் வெளியீடுகள்!

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய 41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல பதிப்பகங்களின் புதிய வெளியீடுகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில் அரங்கு எண் 379இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் நிறுவனத்தின் புதிய வெளியீடுகள் இடம்பெறுகின்றன. அந்தப் புத்தகங்கள் குறித்த முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மின்னம்பலத்தின் இதர வெளியீடுகள் குறித்த முன்னோட்டம் தினமும் வெளியாகும்.

ஜெயலலிதா - வாழ்க்கையும் வழக்குகளும்

(அருண் வைத்தியலிங்கம்)

மக்களாட்சி நடைபெறும் இக்காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் சந்தித்த வழக்குகள் விசித்திரமான சூழ்நிலைகளையும் விந்தையான தீர்ப்புகளையும் நீதிமன்றம் கண்ட ‘முன்மாதிரியான’, ‘முதன்முறையாக’, ‘விதிவிலக்கான’ பல சம்பவங்களையும் கொண்டதாகவும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளோர் சட்டம், நீதி, வழக்கறிஞர்கள் மற்றும் அறம் குறித்த பல்வேறு விவாதங்களையும், தெளிவுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளன. அரிதான இவ்வழக்குகளையும் அவற்றின் தீர்ப்புகளையும் ஆவணப்படுத்துவதே இந்நூலின் குறிக்கோள். இவ்வழக்குகளைப் படிப்பவர்களுக்கு நீதி என்பது எவ்விதமான சூழ்நிலைகளைக் கடந்து தன்னை சுயபரிசோதனை செய்துகொள்கிறது என்பதை உணர்த்தும்.

*

ஒரு பொம்மலாட்டத்தின் கதை

(ஆரா)

மாநிலச் சுயாட்சி என்ற உள்ளீட்டோடு இதுவரை மாநிலக் கட்சிகளின் தனிநபர் ஆதிக்கத்தையே கண்டுவந்திருக்கிறது தமிழ்நாடு, அந்தத் தனி நபர் ஆதிக்கம் முடிந்த கையோடு டெல்லியின் நேரடிக் கைகள் தன்மீது படர்வதைக் கடந்த ஒரு வருடமாக நேரடியாகவே உணரத் தொடங்கியது. இந்த உணர்வின் வெளிப்பாடுதான் ‘ஒரு பொம்மலாட்டத்தின் கதை’.

அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தங்கள் தலைவி ஜெயலலிதா முன்னெடுத்த நகர்வுகளை எப்படி அவரது கட்சியினர் ஒரேயடியாகப் புரட்டிப்போட்டு அதன்மேல் தங்கள் அதிகாரத்துக்கான தகவமைப்புகளை நிறுவிக்கொண்டனர் என்பதன் சாட்சியம்தான் இந்தக் கட்டுரைகள்.

மத்திய ஒரு முனைப்புள்ளி ஆட்சிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட ஒரு மாநிலத்தின் வலிமையற்ற ஆட்சியின் அதிகார ஆட்டம்தான் இந்தப் பொம்மலாட்டம்.

*

முகமூடிகளுக்கு வரலாற்றிடமிருந்து ஒரு சேதி

(அரசியல் விமர்சனக் கட்டுரைகள்)

அரவிந்தன்

சமகால அரசியலை அதன் வரலாற்றுப் பின்புலத்தோடு புரிந்துகொள்ள விழையும் அலசல்கள் இவை. படைப்பாளியின் நோக்கோடு அரசியலை அணுகும் அரவிந்தன் நடைமுறைக் கணக்குகளைக் காட்டிலும் கோட்பாடுகளுக்கும் அணுகுமுறைகளுக்கும் அதிக அழுத்தம் தருகிறார். அரசியல், சமூகதளங்களில் நிகழும் சமகாலச் சலனங்களைக் காலத்தின் பின்னணியில் வைத்து விமர்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

*

மின்னம்பலம் சிறப்புக் கட்டுரைகள்

மெய்யான அக்கறை, அசலான சிந்தனை, பாரபட்சமற்ற நோக்கு, விளிம்பு நிலை வாழ்க்கை குறித்த நுண்ணுணர்வு, புதிய அம்சங்களில் கவனம், பழைய விஷயங்களைப் புதிய கோணத்தில் பார்க்கும் விழைவு...

இத்தகைய தன்மைகளைக் கொண்ட கட்டுரைகளை நாள்தோறும் வெளியிட்டுவரும் இதழ் மின்னம்பலம்.காம். ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு கட்டுரைகளையேனும் இந்தத் தரத்தில் கொண்டுவரும் இதழ் இது. அதாவது, ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1,500 கட்டுரைகள்.

அரசியல், கலை, சமூகம், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இவ்வளவு காத்திரமான கட்டுரைகளை இந்த அளவுக்கு வெளியிடும் தமிழ் ஊடகம் எதுவும் இல்லை என்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். இத்தகைய கட்டுரைகளிலிருந்து சிலவற்றை இந்தத் தொகுப்பில் வழங்கியிருக்கிறோம்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 12 ஜன 2018