மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

இன்டர்வியூவின்போது...

மேலாளர்: நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தையைச் சொல்லுங்க.

பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்.

மேலாளர்: நல்லது.

பையன்: கெட்டது.

மேலாளர்: வாங்க சார்.

பையன்: போங்க சார்.

மேலாளர்: அழகு,

பையன்: ஆபத்து.

மேலாளர்: நீங்க தப்பா சொல்றீங்க.

பையன்: நான் சரியா சொல்றேன்.

மேலாளர்: பேச்ச நிறுத்து.

பையன்: தொடர்ந்து பேசு.

மேலாளர்: இப்போ வாயை மூடுறீயா இல்லையா?

பையன்: இப்ப பேசுறீயா இல்லையா?

மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்.

பையன்: தொடங்குடா எல்லாத்தையும்.

மேலாளர்: போடா வெளியே.

பையன்: வாடா உள்ளே.

மேலாளர்: ஐயோ கடவுளே...

பையன்: ஆஹா பிசாசே...

மேலாளர்: யூ ஆர் ரிஜெக்டட்...

பையன்: ஐ ஆம் செலக்டட்...

இப்படிப்பட்ட ஆட்களை வெச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க. அதுக்கேத்த மாதிரி நமக்கு சூழ்நிலைகளும் அமையுது.

எப்பவாவது சோதனைன்னா பரவால்ல... எப்பவுமே சோதனைன்னா? என்னைய்யா பண்றது.

தோல்வி என்பது வெற்றிக்கு முதல்படி. ஆனா, நமக்கு மட்டும்தான் நிறைய படிகள் இருக்கிறது போலவே தோணுதே... அது எனக்கு மட்டும்தானா?

‘ஓட்ட’ பஸ் கேட்டா ‘ஓட்டை’ பஸ் கொடுக்கறாங்க.

யோவ் கண்டக்டரு இந்த பஸ் ஏற்காடு போகுமா? ஏறி உள்ளே உட்காருயா... ஏற்காடா, சுடுகாடானு டிரைவர்தான் முடிவு பண்ணுவாரு அப்படின்னும் சில பேர் சொல்லி பயமுறுத்துறாங்க.

‘புயல் வேகத்து போய்கிட்டு இருக்குறேன். குறுக்கே ஏதும் கவர்ன்மென்ட் பஸ் வராம பார்த்துக்கோ ஆண்டவா’ என்பதே தற்போதைய பாதசாரிகளின் வேண்டுதலாக இருக்கும்.

தமிழகத்தில் எட்டு நாள்கள் நடைபெற்ற பஸ் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது... இதே நியூஸைத்தான் மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 12 ஜன 2018