மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

பதினாறு மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று!

பதினாறு மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று!

திருச்சி மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த ஓராண்டாக மாவட்டத்தின் 14 பகுதிகளில் கழிவறைகள் கட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைச் சுகாதாரம், கல்வி, சமூகநலத் துறை உள்ளிட்டவை மூலம் மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவன அதிகாரி மலர்விழி கூறுகையில், “2013-2014ஆம் ஆண்டுகளில் 404 கிராம பஞ்சாயத்துகளில் கீழ்மட்டத்தில் இருந்து திறந்தவெளி கழிப்பிடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

எங்கெல்லாம் திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாட்டில் இருக்கிறதோ, அங்கே மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கடந்த ஓராண்டில் மட்டும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 90,000 தனித்தனி கழிவறைகள் கட்டி முடிக்கப்பட்டன. பொது மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி இருப்பதால், எளிதாகத் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க முடிந்தது.

மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருந்தால்தான் அடுத்து வரும் தலைமுறையினரிடமும் திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழிக்க முடியும். அதனால், கிராமப்புறம், குக்கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் சிறந்த பள்ளி மற்றும் சிறந்த சுயஉதவிக் குழுவின் உதவியை நாட திட்டமிட்டுள்ளோம். திருச்சி உட்பட 16 மாவட்டங்கள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைத் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு, இன்னும் 16 மாவட்டங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018