மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: உலகைச் சுற்ற விரும்பும் இந்தியர்கள்!

சிறப்புக் கட்டுரை: உலகைச் சுற்ற விரும்பும் இந்தியர்கள்!

சோஹினி தாஸ்

அகமதாபாத்தின் தோல்கா கிராமத்தில் வசிப்பவர் மேருபாய் பர்வாடு. இவர் அடுத்த சர்வதேச சுற்றுலாவுக்கான திட்டமிடலில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இவர் விடுமுறை சமயத்தில் ஒருமுறை கனடாவுக்குச் சுற்றுலாச் செல்ல திட்டமிட்டுள்ளார். பர்வாடைப் பொறுத்தவரையில் சர்வதேச சுற்றுலாவில் ஆர்வமுடையவர். இவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்குக் கடந்த இரண்டாண்டுகளில் சுற்றுலா சென்றுள்ளார்.

“முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் பணச் செலவிடல் மேலாண்மை ஆகியவை சர்வதேச சுற்றுலாவில் சேமிப்புக்கு உதவும்” என்கிறார் பர்வாடு. இவர் வணிகம் மற்றும் குழு சுற்றுலா விரும்புதல் துறையில் பட்டம் முடித்துள்ளார்.

பர்வாடு மட்டுமின்றி இந்தக் கிராமத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் மற்றும் வேளாண் பொருள்கள் வர்த்தகர்கள் வழக்கமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அக்சார் டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் குஜராத் சுற்றுலா மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவுள்ள மனீஷ் சர்மா கூறுகையில், “வெளிநாடு சுற்றுலா செல்லும் 27 சதவிகித பயணிகள் குஜராத்திகள் ஆவர்” என்றார். சர்மாவைப் பொறுத்தவரையில் குஜராத்தில் உள்ள 30 சுற்றுலா இயக்குநர்களுடன் இணைந்து இயங்கிவருகிறார்.

இவர் பத்தாண்டுகளுக்கு முன்பு 4,000 முதல் 5,000 பேரை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தார். தற்போது ஆண்டுக்கு 25,000 - 30,000 பேர் வரை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறார். குஜராத்தில் உள்ள எல்லா சுற்றுலாக் குழு இயக்குநர்களும் ஆண்டுக்கு 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரையிலான சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு அனுப்பி வருகின்றனர் என்று சர்மா மதிப்பிடுகிறார்.

குஜராத் மட்டும் விதிவிலக்கல்ல. 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு சுற்றுலா செல்வர் என்று ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பு (யூ.என்.டபுள்யூ.டி.ஒ) கணித்துள்ளது. தற்போது இந்தியாவிலிருந்து 25 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு சுற்றுலா செல்கின்றனர். அடுத்த இரண்டாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று ஐ.நா உலகச் சுற்றுலா அறிக்கை கூறுகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்டொன்றுக்கு 8 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வெளிநாடு சுற்றுலா சென்று வந்தனர்.

யாத்ரா விண்டர் டிரேவல் சர்வே 2017 என்ற அறிக்கையில், “சர்வதேச விடுமுறைக்கு 36 சதவிகித இந்தியர்கள் வெளிநாடு சுற்றுலா செல்லத் திட்டமிடுகின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தோமானால் 2017ஆம் ஆண்டு 25 மில்லியன் பயணிகள் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாடு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

யாத்ரா.காம் நடத்திய இந்த ஆய்வறிக்கை குறித்து அதன் இயக்கு அலுவலராக உள்ள சாரத் தால் பிசினஸ் ஸ்டேண்டர்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “வெளிநாடு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபியில் இதன் மதிப்பு 7 சதவிகிதமாக உயரும். நடுத்தர வர்க்கத்தினரின் ஊதியம் அதிகரித்துவருவதால் சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும். மேலும் சுற்றுலாத் துறையில் இ.எம்.ஐ. போன்ற திட்டங்களின் அறிமுகம், விமானச் சேவையின் கட்டணங்கள் குறைந்துவருதல் போன்றவையும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும்” என்றார்.

இந்தியாவின் வெளிநாட்டு சுற்றுலாவைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு 15-18 சதவிகித வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மட்டும் சர்வதேச சுற்றுலாவை அதிகம் மேற்கொள்ளவில்லை. பொதுவாகவே உலகம் முழுவதும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருகிறது. மோஹிட் குப்தா, சி.ஓ.ஓ. மற்றும் மேகிடிரிப் போன்ற ஆய்வறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. உள்நாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வோரோடு ஒப்பிடும்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 3.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல 2016ஆம் ஆண்டு குளிர்காலத்தை ஒப்பிடும்போது 2017ஆம் ஆண்டு 39 சதவிகிதம் பேர் கூடுதலாகச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்திய வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் மட்டுமின்றி சர்வதேச பயணங்களும் 2017ஆம் ஆண்டு குளிர்காலத்தில் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பணக்காரர்களும், நடுத்தர வர்க்கத்தினருமே அதிகளவில் சர்வதேசப் பயணங்களை மேற்கொள்கின்றனர். குஜராத்திலிருந்து வெளிநாடு சுற்றுலா செல்லும் 27 சதவிகித பயணிகளில் குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ள மக்களுமே அதிகமாவர். அடுத்ததாக ஆசிரியர்களும், அரசு அதிகாரிகளும் உள்ளனர் என்று சர்மா கூறுகிறார். இவர்கள் பெரும்பாலும் சிறு நகரங்களில் வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆனால், இந்த மதிப்பீடுகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. உண்மையில் நடுத்தர வகுப்பினரிடமிருந்து அதிகமானவர்கள் சர்வதேச அளவில் பயணிக்க விரும்புகிறார்கள். இந்தியாவின் வெளிநாடு சுற்றுலா இயக்குநர்கள் சங்கத்தின் (ஒ.டி.ஒ.ஏ) தலைவர் மகேந்திர வகாரியா கூறுகையில், “உள்நாட்டுச் சுற்றுலாவுக்கு கூடுதலாகச் செலவாவதால் (மும்பையிலிருந்து துபாய் செல்ல ஆகும் செலவை விட மும்பையிலிருந்து கேரளா செல்லும் செலவு கூடுதலாகும்) நடுத்தர வர்க்கத்தினர் கூடுதலாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

சர்வதேச விமான நிறுவனங்கள் சலுகை விலையில் குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டுப் பயணங்களைச் சாத்தியமாக்குகின்றன. அதேபோல உள்நாட்டு விமானத் துறையில் இரண்டாம்தர நகரங்களையும் இணைத்துள்ளன. உதாரணத்துக்கு வராணாசி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களுக்கும் இன்று விமானப் போக்குவரத்து எளிதாகியுள்ளது. ஏர் ஏசியா நிறுவனம் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் விமானங்களை இயக்குகிறது. அதேபோல ஜெய்ப்பூரிலிருந்தும், புவனேஷ்வரிலிருந்தும் சிங்கப்பூர் விமானங்களை இயக்கி வருகிறது.

இது சிறந்த விமான போக்குவரத்து இணைப்பை நாடு முழுவதும் தருவதற்கான முயற்சி என்று மட்டும் சொல்ல முடியாது. விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் போட்டியும் ஒரு காரணமாகும். இந்தியாவுக்குப் பயணம் செய்வது முன்பெல்லாம் கூடுதல் செலவை ஏற்படுத்தும். மேற்கு இந்திய பகுதிகள் மற்றும் வட இந்தியப் பகுதிகளிலிருந்துதான் அதிகமாக வெளிநாடு செல்கின்றனர். மார்வாடிகளும் குஜராத்திகளும்தான் அதிகளவில் வெளிநாடு செல்லும் பயணிகளாகவுள்ளனர்” என்றார்.

நன்றி: பிசினஸ் ஸ்டேண்டர்டு

தமிழில்: பிரகாசு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 12 ஜன 2018