மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும்!

ஆசிரியர் நியமனம்: வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும்!

ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்துவிட்டு, தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் நடைபெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (ஜனவரி 11) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இப்போதுள்ள (வெயிட்டேஜ்) தகுதிகாண் மதிப்பெண் முறையே தொடரும் என்றும், இந்த முறை ரத்து செய்யப்படாது என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் பறிக்கப்பட்ட சமூகநீதி மீண்டும் நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இம்முடிவு ஏமாற்றமளித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெயிட்டேஜ் முறையை மாணவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ள அவர், “வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது குறித்து தமது தலைமையிலான பள்ளிக்கல்வித் துறையின் உயர்நிலைக்குழு நவம்பர் மாதம் கூடி முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். ஆனால், இரு மாத இழுபறிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழுக் கூட்டத்தில், ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்துவது என்றும், தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யாமல் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்துவது வரவேற்கப்பட வேண்டியதா£கும். ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று” என்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெயிட்டேஜ் முறை என்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினரை பழிவாங்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற அனைத்துப் பிரிவு மாணவர்களும் 60% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது கடினமான இலக்காக இருந்ததாலும், மற்ற மாநிலங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தேர்ச்சி மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாலும் தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை 55% ஆக குறைத்த தமிழக அரசு, நியமன முறையில் மாற்றங்களைச் செய்தது என கூறியுள்ள அவர், “அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால், வெயிட்டேஜ் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்ணில் தலா 15%, 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அரசு அறிவித்தது. இது அனைவருக்கும் சமநீதி என்ற இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுக்கு முற்றிலும் எதிரானது” என்று தனது தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 12 ஜன 2018