மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 ஜன 2018

உருக்கு உற்பத்தியில் சாதனை!

உருக்கு உற்பத்தியில் சாதனை!

2017ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 100 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய உருக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி 2017ஆம் ஆண்டில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது மற்ற எல்லா வருடத்தையும்விட அதிகமாகும். 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 101.28 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் (2017-18) ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இதுவரை 75.50 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2016ஆம் ஆண்டில் 72.20 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 8.65 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8.38 மில்லியன் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் - டிசம்பர் காலத்தில் இந்தியாவின் மொத்த கச்சா உருக்கு உற்பத்தியில் எஸ்.ஏ.ஐ.எல்., ஆர்.ஏ.ஐ.எல்., டி.எஸ்.எல்., எஸ்ஸார்., ஜே.எஸ்.டபள்யூ.எல்., மற்றும் ஜே.எஸ்.பி.எல். ஆகிய நிறுவனங்கள் 43.39 மில்லியன் டன் உருக்கை உற்பத்தி செய்திருந்தது. இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளன. மீதமுள்ள 32.10 மில்லியன் டன் கச்சா உருக்கை மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ளன” என்றார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 12 ஜன 2018