மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

பியூட்டி ப்ரியா: கவனிக்கிறீர்களா கால்களை?

பியூட்டி ப்ரியா: கவனிக்கிறீர்களா கால்களை?

“அதிகமாக நடந்ததால் ஏற்பட்ட வலியாக இருக்கும்” என்று தமக்குத்தாமே சமாதானம் செய்துகொண்டு கால்வலியைச் சிலர் அலட்சியப்படுத்துவதுண்டு. ஆனால், இரண்டு நாள்களாகத் தொடர்ந்த வலி என்றால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். மருத்துவரை அணுகுவதே நல்லது. பாதங்களின் வண்ணம் மாறுகிறதா, தட்ப வெப்பம் எப்படியிருக்கிறது, பாதங்களில் வெடிப்பு, கீறல் இருக்கிறதா, உள்ளங்கால்களில் தோல் உரிகிறதா என்று அடிக்கடி கால்களைக் கவனித்து கொள்ள வேண்டும்.

பிளேடு, கத்தரிக்கோல் பயன்படுத்தாமல் நகம் வெட்ட நெயில் கட்டரைப் பயன்படுத்துவது நல்லது. கால்களை சோப்பு போட்டோ அல்லது 2-3 சொட்டு நோய்க்கிருமி எதிர்க்கும் திரவத்தைத் தண்ணீரில் கலந்தோ கழுவலாம். சிலர் வெறும் காலோடு நடப்பர். வெறும் காலோடு நடப்பதன்மூலம் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. செருப்பு போடும்போது, வெயிலைத் தடுக்கும் க்ரீமைக் கால்களில் தடவ வேண்டும்.

கொப்புளம், சேற்றுப்புண் இருந்தால் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. கால்களைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். கால் விரல்களின் நடுவில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். கால் நகங்களை, சீராக வெட்ட வேண்டும். நகங்களின் ஓரங்களை வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால், நகம் வளர்வதற்குத் தடையாக இருக்கும்.

கால்களுக்கு வீட்டு வைத்தியம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டிருப்போர் வருடத்துக்கு ஒரு முறை போடியாட்ரிக் மருத்துவரை அணுகுவது சிறந்தது. இல்லையென்றால், புண் மற்றும் கொப்புளம் ஏற்பட்டுப் பெரிய நோயை உண்டாக்கும்.

கால்களில் ஏற்படும் பூஞ்சை பாதிப்பு:

மழைக்காலங்களில்தான் கால்களில் சேற்றுப் புண் ஏற்படும். ஈரமான செருப்பு மற்றும், ஈரப்பதமான தட்பவெப்ப நிலை, ஈரமான பாதம் காரணமாக கால்களின் பாதங்களைப் பூஞ்சை பாதிக்கும். கால் விரல்களின் நடுவில் வெள்ளை நிறங்கள் ஏற்படுவது, உள்ளங்கால் கீறலாகவோ அல்லது கனமாகவோ இருப்பது, நகங்களில் நிறம் மாறுவது போன்றவை இவற்றின் அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

எப்போதும் பாதங்களைக் கழுவி சுத்தமாகவும், ஈரமில்லாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பருத்தி சாக்ஸைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒரே ஷூவைத் தொடர்ந்து போடாமல், மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 11 ஜன 2018