மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: வெளிவராத ஜெ. வீடியோ!

டிஜிட்டல் திண்ணை: வெளிவராத ஜெ. வீடியோ!

சசிகலா புது முடிவு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“பொங்கல் வரப் போகிறது.. நாளை பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சித்தியை (சசிகலா) பார்க்கப் போவதாக சொல்லியிருக்கிறார் டிடிவி தினகரன். நாளை சட்டமன்றக் கூட்டம் இருந்தும் திடீரென தினகரன் பரப்பன அக்ரஹாரா செல்ல வேண்டிய அவசரம் என்ன, அவசியம் என்ன என்ற கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை. இதற்கு தினகரன் சொன்ன பதில், ‘பொங்கலுக்கு முன்பு சித்தியைப் பார்த்து வாழ்த்துச் சொல்லணும். நாளைக்கு விட்டுட்டா ஐந்து நாட்கள் லீவு வந்துடும். அதனால் நாளைக்கே பார்த்தாகணும்’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் காரணமா என விசாரித்தோம்.

‘சில தினங்களுக்கு முன்பாக இளவரசியின் மகன் விவேக் சிறைக்குச் சென்றதையும் சசிகலாவை பார்த்துப் பேசியதையும் நாம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம். கடந்த முறை தினகரன் சிறைக்கு சென்ற சமயத்தில் சசிகலா அவரிடம் பேசவில்லை. தினகரனோ அவர் மௌன விரதத்தில் இருப்பதாகச் சொன்னார். ஆனால், தினகரன் மீது இருந்த கோபத்தில்தான் அவர் பேசாமல் திருப்பி அனுப்பினார். இந்த சூழ்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு சசிகலாவை சந்தித்த விவேக், பல விஷயங்களை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்று இரவு, சிறையில் இருந்து சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் மூலமாக தினகரனிடம் பேசி இருக்கிறார்கள். ‘அவரை நான் உடனே பார்க்கணும் வரச் சொல்லுங்க...’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் சசிகலா.

‘நான் போன தடவை போன போது அவங்கதான் பேசவே இல்லையே... இப்போ அவங்கதான் வரச் சொன்னாங்களா?’ என கேட்டு இருக்கிறார் தினகரன். ‘ஆமாங்க.. சின்னம்மாதான் வரச் சொன்னாங்க...’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

சசிகலாவைப் பொறுத்தவரை விவேக்கிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ஜெயா டிவி நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைத்த பிறகு, சேனலுக்கான வியூவர்ஸ் அதிகமாகி இருக்கிறார்கள் என சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார்கள். விவேக்கின் விருப்பமும்கூட அரசியல் என்பதால், விவேக் சம்பந்தமான சில விஷயங்களை தினகரனுடன் பேச சசிகலா திட்டமிட்டு இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், ஜெயலலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் எல்லாமே தினகரனிடம்தான் இருக்கிறது. இனி எந்தக் காரணம் கொண்டும் அதில் எந்த ஒரு வீடியோவும் வெளியாகிவிடக் கூடாது என நினைக்கிறாராம் சசிகலா. அந்த வீடியோக்களை எல்லாம் உடனடியாக விவேக்கிடம் ஒப்படைக்கச் சொல்லவும் போகிறாராம். இப்படி பல திட்டங்களுடன் தான் தினகரனை பெங்களூரு அழைத்திருக்கிறாராம் சசிகலா.

தினகரன் மீது சசிகலா கோபமாக இருந்தாலும், இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பது பெங்களூரு புகழேந்திதான். அண்மையில் விபத்தில் சிக்கிய புகழேந்தியை அவரது பெங்களூரு வீட்டுக்குப் போய் நலம் விசாரித்துவிட்டு வந்தார் தினகரன். அப்போது, சசிகலா கோபத்தில் இருப்பதை புகழேந்தியிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் தினகரன். ‘சின்னம்மாகிட்ட நான் பேசுறேன். நீங்க போங்க..’ என சொல்லி அனுப்பி இருக்கிறார் புகழேந்தி. சொன்னபடியே அவரும் சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசி இருக்கிறார். அப்போது, தினகரன் மீதுள்ள கோபத்தையெல்லாம் புகழேந்தியிடம் கொட்டியிருக்கிறார் சசிகலா. அவரை சமாதானப்படுத்திய புகழேந்திதான், நாளைய சந்திப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“புகழேந்தி சொல்வதை எல்லாம் எப்படி சசிகலா கேட்க ஆரம்பித்திருக்கிறார்?” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.

பதிலை அடுத்த மெசேஜ் ஆகப் போட்டது வாட்ஸ் அப்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018