லோக் அதாலத்: 100 கைதிகள் விடுதலை!

லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் புழல் சிறையில் இருந்து 100 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு லோக் அதாலத் நடைபெறும். இதில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு பெயில் எடுக்க முடியாத குற்றவாளிகளின் மனுக்களைப் பெற்று விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
நீதிமன்றங்களில் கிடப்பில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும், மக்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெறுகின்றன.
இந்த லோக் அதாலத் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் 71 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஹிலுவாடி ஜி.ரமேஷ் உத்தரவின் பேரில் நேற்று (ஜனவரி 10) புழல் சிறையில் சிறப்பு லோக் அதாலத் அமைக்கப்பட்டது.