மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்

அறிவுரை கூறிய சிவகார்த்திகேயன்

உணவு கட்டுப்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார் நடிகா் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வேலைக்காரன். இந்தப் படம் அதிகம் விற்பனையாகும் பாக்கெட் உணவுப் பொருட்களின் விற்பனைக்குப் பின்னால் உள்ள அரசியலையும் அந்தப் பொருட்கள் ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைப் பற்றியும் பேசியது. இந்தப் படத்தில் நடித்த பிறகு சிவகார்த்திகேயன் எங்குச் சென்றாலும் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நேற்று (ஜனவரி 10) கோவையில் வ.உ.சி. மைதானத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான உடல் எடை குறைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாக மாணவர்களுக்கான அறிவுரையை அவர் வாரி வழங்கியுள்ளார். பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், "உங்கள் மத்தியில் யாரேனும் குண்டாக இருந்தால் அவர்களை கிண்டல் செய்யக் கூடாது. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளைப் பரிந்துரைக்க வேண்டும். பீட்சா, பா்கா் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம், குளிர்பானங்களைக் குடிப்பதை தவிர்த்து, ஆரோக்கியமான இளநீரைக் குடிக்கலாம். மேலும் தினமும் பழச்சாறுகளை குடிக்க வேண்டும். அதே போல் வீட்டில் உள்ள காய்கறிகளை மட்டும் உண்பதாலேயே நாம் போதிய ஆரோக்கியத்துடன் வாழ முடியும்" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018