தற்காலிக ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக் பண்ணலையா? :அப்டேட் குமாரு


தமிழ்நாட்டு மக்களை எவ்வளவு அசிங்கப்படுத்துனமோ அவ்வளவு அசிங்கப்படுத்தியாச்சு. இன்னைக்கு அதுலயும் முத்தாய்ப்பா நாய் பிடிக்குற வண்டியில ஆள் ஏற்றி மக்கள் கஷ்டத்தை குறைக்குது எடப்பாடி அரசு. தமிழ்நாடு பவள விழா, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழான்னு இவங்க எப்பவும் ஃபெஸ்டிவல் மூடுல தான் இருக்காங்க. நாம தான் ஃபெஸ்டிவல்ல கூட பிரேக்கிங் நியூஸ் பார்த்துட்டு இருக்கோம். ‘மக்கள் போடுற கோஷம் எல்லாம் கேட்காம இல்ல. இருந்தாலும் ஏன் அதை பத்தி கவலைப்படாம எம்.எல்.ஏ அலோவன்ஸை கூட்டுறாங்கன்னா, இருக்கப்போறது ஆறு மாசமோ, ஒரு வருசமோ அதுவரைக்கு நல்லா இருந்துட்டு போயிடுவோம்னு நினைச்சுருப்பாங்க. எப்டியும் அடுத்து இந்த பக்கம் வரமுடியாது. அதான் வந்த வரைக்கு லாபம்னு இறங்கிட்டாங்க’ன்னு நெட்டிசன்ஸ் புட்டு புட்டு வைக்கிறாங்க. என்ன தான் இருந்தாலும் மனுஷன் ஒரு நாள் எக்ஸ்ட்ரா லீவு விட்டு நின்னுட்டாரு சார் அப்டின்னு ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து கேட்குறாரு. உங்களை திருத்தவே முடியாதுப்பா. ஆமா எனக்கு ஒரு டவுட். ஸ்டிரைக் கேன்சல் ஆயிருச்சு. இப்ப தற்காலிக ஓட்டுநர்கள் வேலை போச்சேன்ன்னு மறியல் பண்ணமாட்டாங்களா?
@Thara_Rifa
ஆறு வயசுல ஒரு பையன் வேலைக்கு போனா அவன் அப்பா சரி இல்லன்னு அர்த்தம்....
அறுபது வயசுல அப்பா வேலைக்கு போனா பெத்த புள்ளை சரி இல்லன்னு அர்த்தம்...
@Kozhiyaar
'வரும் பொழுது ஒரு கிலோ 'சீரக சம்பா' வாங்கிட்டு வாங்க'ன்னு ஃபோன் வருது!
இன்னைக்கு எந்த சமையல் நிகழ்ச்சிய பார்த்தாங்களோ!?
ஐயோ, இப்பவே தொண்டைய கவ்வுதே!!!
@ajmalnks
மாணவர்களை பொறுத்த வரையில் காலண்டர் என்பது அரசு விடுமுறையை தெரிந்து கொள்வதற்கான ஒரு கருவியே.
@Thaadikkaran
அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து 2 பேர் பணம் வசூலித்து ஓட்டம் - செய்தி
கவுண்டமணி பேன்-ஆ இருப்பானுங்களோ..!
@CreativeTwitz
போக்குவரத்தை தனியார் மயமாக்க முயன்றால், அரசையும் தனியார் மயமாக்க வேண்டியது தான் - பொன்.ராதாகிருஷ்ணன்!
அய்யா, ஏர் இந்தியா வை, நீங்க தனியார்மயம், ஆக்க போறீங்க, அப்போ உங்க அரசும் தனியார்மயம் ஆயிடுமா?
@ajay_aswa
நண்பன் : மச்சா ஹெவி லைசென்ஸ் எடுக்கனும் டா அதற்கு பஸ் ஓட்டி பழக பத்து நாளைக்கு 3000 ரூ கேக்குறாங்கடா
நான் : அட லூசு பயலே பஸ்சும் கொடுத்து சம்பளமும் கொடுக்குறாங்கடா அங்க போய் பழகிக்கடா
@HAJAMYDEENNKS
மத்திய அரசிடம் கைகட்டி, வாய்மூடி நிற்கவில்லை - எடப்பாடி பழனிசாமி #
கை கட்டி , வாய் மூடி நிற்காமல் காலில் விழுந்துட்டோம்னு சொல்றாரு போல...!
@vishnut87
தொலைநோக்கு பார்வையோடு தமிழக அரசு செயல்படுத்திய முதல் திட்டத்திற்கு வாழ்த்துக்கள்
தேர்தல் வந்தா திரும்ப பதவிககு வர்றது கஷ்டம்னு பென்ஷனாவது ஜாஸ்தி வரட்டும்னு ஏத்திய எம் எல் ஏ சம்பளம்.
@Kozhiyaar
பணியிடத்திலும் ஒரு சார்ஜர் வைத்துவிடுவது, பெரும் மனநிம்மதியை தருகிறது!!
@Sureka5670
இனிமேல் தமிழ்நாட்டில் வெற்றி தோல்வி என்பது கொள்கை கோட்பாடுகளில் இல்லை. கொள்ளையில் யார் அதிகமாகப் பங்கு தருவர் என்பதில்தான் உள்ளது
@வாசுகி பாஸ்கர்
வைரமுத்துவை ஆதரித்து ஸ்டாலின் கடுமையாய் எதிர் வினையாற்றுவார் என்று காத்திருப்பதற்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்டு விட்டார்!
@Rajayogiahgtwa1
தமிழ்நாடு என்று பெயர் மாற்றியதால் மட்டும் இந்தத் தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டதா இல்ல எமஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடியதால் மட்டும் மக்கள் வாழ்வாதாராம் பெருகி விட்டதா?
ஏன் இந்தக் கொண்டாட்டங்கள் அப்ரசென்ட்டீஸ்களா ?
@கருப்பு கருணா
நானே நல்லாட்சி கொடுக்கும்போது உள்ளாட்சி எதுக்கு : சீமான்
ஆஹா..என்னே ஒரு ஜனநாயக குரல்..தட்றா..தட்றா ..தட்றா..!
@archanabaluit
டிரைவர்லாம் எங்க வீட்ல இல்ல ஸ்க்ரூட்ரைவர் வேணா இருக்குனு சொன்னாலும்
பரவால்ல அவர வர சொல்லுங்க தினம் 500 சம்பளம்னு சொல்றான் அடேய்
@kavitha129
ஆட்டோ டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் மின்கம்பத்தில் மோதியது
மின்கம்பத்து மேல கேஸ போடுவாங்க மொதல்ல - அதான
@Kozhiyaar
இப்பெல்லாம் காலைல ஒருத்தர எழுப்ப அலாரம்லாம் வைக்கத் தேவையில்லை, போர்த்தியிருக்கிற போர்வைய அழுங்காம உறுவிட்டா போதும்!!
@கருப்பு கருணா
எண்ணற்ற
ஆண்டாள் ஆய்வாளர்களை உருவாக்கிய
ஹெச் ராஜாவுக்கு
அனந்தகோடி
நமஷ்காரங்கள்.
@mani_prabu
அடுத்து
எந்த
டிபார்ட்மெண்ட் ஸ்டிரைக்
பண்ண காத்திருக்கோ..?!?
@chithradevi_91
நடக்குற கொடுமையெல்லாம் பார்த்து இந்த கவர்மென்ட் மேல பயங்கர கோபமா இருந்தவங்களுக்கெல்லாம் வெள்ளிக்கிழமையே ஸ்கூல் லீவுன்னதும் கோபம் போயே போயிருக்குமே
-லாக் ஆஃப்