மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

உலகின் மூன்றாவது பரபரப்பான விமான வழித்தடம்!

உலகின் மூன்றாவது பரபரப்பான விமான வழித்தடம்!

உலகின் மூன்றாவது அதிகப் போக்குவரத்துள்ள வழித்தடமாக மும்பை-டெல்லி விமான வழித்தடம் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஓஏஜி வேர்ல்டுவைடு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள விமான வழித்தடங்களில் கடந்த ஆண்டில் எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதில், 64ஆயிரத்து 991 விமானங்கள் இயக்கப்பட்டு தென்கொரியாவின் சியோல் ஜிம்போ- ஜெஜு வழித்தடம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்தபடியாக, 54ஆயிரத்து 519 விமானங்கள் இயக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்-சிட்னி வழித்தடம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 47ஆயிரத்து 462விமானங்கள் இயக்கப்பட்டு மும்பை-டெல்லி வழித்தடம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் மொத்த விமானங்களின் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ,மும்பை மற்றும் டெல்லியில் ஒரே ஒரு பெரிய விமான நிலையம் உள்ளது. எனவே இந்த விமான நிலையங்களிலிருந்து அனைத்து விமானங்களும் இயக்கப்படுகின்றன.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 11 ஜன 2018