மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

தொடரும் களையெடுப்பு!

தொடரும் களையெடுப்பு!

கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இரட்டை இலை வழக்கில் வெற்றிபெற்றதன் மூலம் அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி-பன்னீர் தரப்புக்கு சொந்தமானது. அதன்பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்கும் படலம் ஆரம்பித்தது.

முதலில் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், என்.ரெங்கசாமி உள்ளிட்டவர்களின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டாலும், அவர்கள் யாரும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. தினகரனுக்கு ஆதரவாக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்த நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

" கோவை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்க குமார், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. ரோகிணி (எ) கிருஷ்ணகுமார், சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் டி.ஆர்.ராஜசேகர், ஆனைமலை பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ரஹமத்துல்லா, மதுக்கரை ஒன்றியம் டாக்டர் ராஜாராம், ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018