மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

போகி: சென்னையில் 15 இடங்களில் ஆய்வு!

போகி: சென்னையில் 15 இடங்களில் ஆய்வு!

வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 15 இடங்களில் போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசை கண்காணிக்க ஆய்வு நடத்தப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, "போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இந்த நச்சு காற்றை சுவாசிப்பதால் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் இந்த அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. இதுதவிர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 15 ஆண்டுகளாக போகி பண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் போகியின் போது பழைய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் போன்றவை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் காற்று மாசுபாடு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போகிப் பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசை கண்காணிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காற்றின் தர அளவு குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018