மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

பயிர்க் காப்பீடு திட்டத்திற்குக் கூடுதல் நிதி!

பயிர்க் காப்பீடு திட்டத்திற்குக் கூடுதல் நிதி!

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மதிப்பை ரூ.13,000 கோடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு அடுத்த நிதியாண்டுக்கான (2018-19) புதிய பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட் தாக்கலில் பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (பி.எம்.எஃப்.பி.ஒய்.) திட்டத்திற்குக் கடந்த ஆண்டை விடக் கூடுதலாக நிதி ஒதுக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.10,701 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழையக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி 2016ஆம் ஆண்டு தற்போதைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை பாஜக அரசு அறிவித்தது. பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்த பழைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும், அந்நிய நிறுவனங்களையும் இணைத்து புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018