மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

சபாநாயகர் வாய்ப்பு தர மறுக்கிறார்!

சபாநாயகர் வாய்ப்பு தர மறுக்கிறார்!

சட்டப்பேரவையில் தான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பதாகக் கூறிய தினகரன், சபாநாயகர் என்பவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ 8ஆம் தேதியே ஆளுநர் உரை குறித்து பேச அனுமதி கேட்டேன். நிச்சயம் பார்க்கிறேன் என்று சபாநாயகர் உறுதியளித்தார். ஆனால், இன்று வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். சபாநாயகர் என்பவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 57,000 பேருக்கு வீடு கட்டித்தருவது தொடர்பாக பேச இருந்தேன். மீன் அங்காடியைத் தரம் உயர்த்துதல், குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாகவும் பேச இருந்தேன். உணவு இடைவேளை சமயத்தில் பேச வாய்ப்பு தருவதாக சபாநாயகர் கூறியிருந்தார். தற்போது வாய்ப்பு தரவில்லை” எனத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

செங்கோட்டையனை முதல்வராக்க முயன்றோமோ?

செங்கோட்டையனை முதல்வராக முயன்றதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில்தான் நான் உறுதியாக இருக்கிறேன். எடப்பாடி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றுதான் நான் ஆளுநரிடம் மனு அளித்தேன். ஆனால்,18 எம்எல்ஏக்களின் எண்ணம் என்பது முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே. அதேவேளையில், இவரைதான் முதல்வராக்க வேண்டும் என யாரையும் அவர்கள் முன்னிறுத்தவில்லை” என்று பதிலளித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018