மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

கஜினியான கஜினிகாந்த்

கஜினியான கஜினிகாந்த்

ஆர்யா, சாயீஷா நடிப்பில் உருவாகிவரும் கஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ஹர ஹர மகாதேவகி படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

ரஜினி ரசிகரான ஆர்யாவின் அப்பா தன் மகனுக்கு அவர் பெயரை சூட்டுகிறார். எல்லாருக்கும் நல்ல பையானாக இருக்கும் ஆர்யாவுக்கு மறதி நோய் இருக்கிறது. அந்த மறதி நோயால் ஆர்யா அவதிப்படும் விஷயங்களை காமெடி ஜானரில் சொல்லியிருப்பார்கள் என டீசரைப் பார்க்கையில் தெரிகிறது.

“ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கும் போது... இன்னொரு வேலையில கவனம் போச்சுன்னா.. ஆட்டோமேட்டிக்கா மத்த எல்லாத்தையும் மறந்துருவேன் சார்...” என்கிற வசனமே ஆர்யாவின் கேரக்டரை பிரதிபலிக்கிறது.

பால முரளி பாலு இசையமைக்கும் இதற்கு பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படம் தெலுங்கில் நானி நடிப்பில் ரிலீஸாகி மெகா ஹிட்டான ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 11 ஜன 2018