மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

மக்களே மேயரைத் தேர்ந்தெடுப்பர்!

மக்களே மேயரைத் தேர்ந்தெடுப்பர்!

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் விதமாக புதிய மசோதா இன்று (ஜனவரி 11) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன், பேரூராட்சி சேர்மன் ஆகிய தலைமைப் பதவிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு கவுன்சிலர்களே தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவருவதாக 2016ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. இதற்குப் பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியாக நடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையை மாற்றி கவுன்சிலர்கள் மூலம் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களைத் தேர்தெடுக்கும் முறையைப் புகுத்தியது தமிழக அரசு.

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி இருக்கும் நிலையில் இப்போது மீண்டும் மக்களே மேயர், நகராட்சித் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவருவதாக இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

இதுபற்றி சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி கருத்து தெரிவிக்கையில், “இந்த முறை வரவேற்கத் தகுந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன். இதுதான் சிறந்த முறை. அப்போதுதான் கவுன்சிலர்களின் நெருக்கடி இல்லாமல் பணியாற்ற முடியும். இந்த மசோதாவில் இன்னொரு திருத்தத்தையும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். அதாவது தவறு செய்யும் கவுன்சிலர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தையும் மேயருக்கு அளிக்குமாறு திருத்தம் செய்ய வேண்டும்’’

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018