மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

போக்குவரத்துப் போராட்டம்: இறுதி விசாரணை!

போக்குவரத்துப் போராட்டம்: இறுதி விசாரணை!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. இந்தத் தீர்ப்பை பொறுத்தே போராட்டம் வாபஸ் பெற முடிவெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8ஆவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். விழுப்புரத்தைப் பொறுத்தவரை 654 பேருந்துகளுக்கு 200 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரியில் 866 பேருந்துகளுக்கு 50 சதவிகிதத்துக்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தூத்துக்குடியில் 60 சதவிகிதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சென்னையில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் வெளியே சென்று வரமுடியாமல் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாகச் சென்னை, பல்லவன் இல்லம் முன்பு எல்பிஎஃப்., சிஐடியு உள்ளிட்ட 6 மத்திய தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று 11.30 மணியளவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,”நடுவர் ஒருவரை நியமித்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நடந்த வேண்டும் என்று தொழிற்சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு அரசு தரப்பில், தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக அரசிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்ற நீதிமன்றம் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன், “தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஊதிய மாற்றுக் காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்தது அரசின் கண் துடைப்பே இதனை ஏற்க முடியாது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018