மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

இரு படங்களில் அறிமுகமாகும் நடிகை!

இரு படங்களில் அறிமுகமாகும் நடிகை!

ஒரே நேரத்தில் நடிகர், நடிகைகள் நடித்த இரு படங்கள் வெளியாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அறிமுக நடிகையான ஸ்வாதிஸ்டா நடித்துள்ள இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய ஸ்வாதிஸ்டா சவரக்கத்தி, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

பிசாசு படம் பற்றி இயக்குநர் மிஷ்கினை பேட்டி எடுக்கச்சென்ற ஸ்வாதிஸ்டாவிடம் நடிக்க விருப்பம் இருக்கிறதா என மிஷ்கின் கேட்க அவரும் சம்மதம் தெரிவிக்க மிஷ்கின் சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் சவரக்கத்தியில் ஒப்பந்தமாகியுள்ளார். மிஷ்கின், இயக்குநர் ராம் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்வாதிஸ்டா இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018