மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

ஆம்னி பேருந்து: கட்டண உயர்வு!

ஆம்னி பேருந்து: கட்டண உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் முன்பதிவு கட்டணம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

வழக்கமான நாட்களைக் காட்டிலும், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களிடையே ஆம்னி பஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பஸ்களில் 40 முதல் 50 சதவீதம் வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், கோயம்புத்தூருக்கு ரூ.1000 முதல் ரூ1,600 வரையிலும், திருநெல்வேலிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,800 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018