மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆதிக்கம்!

அரிசி ஏற்றுமதியில் இந்தியா ஆதிக்கம்!

2017ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 22 சதவிகிதம் உயர்ந்துள்ளது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் அரிசியை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ததால், இந்தியா மொத்தம் 1.23 கோடி டன் அளவிலான அரிசியை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது.

அரிசி ஏற்றுமதியில் இந்தியாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்திலிருக்கும் தாய்லாந்தை விட, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்தே அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்மதி தவிர்த்துப் பிற அரிசி வகைகள் ஏற்றுமதி 1.23 கோடி டன்னாக உள்ளது. இதில் வங்கதேசம் மட்டும் 38 சதவிகித உயர்வுடன் 84 லட்சம் டன் அளவிலான அரிசியை இந்தியாவிடமிருந்து வாங்கியுள்ளது. ”சென்ற ஆண்டு முழுவதும் வங்கதேசம் இந்தியாவிடமிருந்து அதிகளவில் அரிசி வாங்கியதின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் இந்திய அரிசிகளின் தேவை குறைந்ததை ஈடுகட்ட முடிந்தது” என்று ஆந்திர மாநிலத்தின் அரிசி ஏற்றுமதி நிறுவனமான ஸ்ரீ லலிதாவின் நிர்வாக இயக்குநர் எம்.ஆதிஷங்கர் தெரிவித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018