மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

நீதிமன்றத்தில் நடராஜன் சரண்!

நீதிமன்றத்தில் நடராஜன் சரண்!

சொகுசுக் கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 11) சரணடைந்தார்.

சொகுசுக் கார் இறக்குமதி வழக்கில் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு, நடராஜன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, நடராஜன் சிறைக்குச் செல்லத் தற்காலிகமாக விலக்கு அளித்தும், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் நடராஜன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகாததால் அவர்களுக்குப் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பிறப்பித்தது. இந்நிலையில், நடராஜன் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஜனவரி 11 சரண் அடைந்துள்ளார்.

வழக்கின் பின்னணி

நடராஜன் 1994ஆம் ஆண்டு, லெக்சஸ் என்ற சொகுசுக் காரை லண்டனிலிருந்து இறக்குமதி செய்தார். ஏற்கனவே பயன்படுத்திய பழைய கார் எனக் கூறி இறக்குமதி செய்ததால் ரூ.1 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன் , அவரதுஉறவினர் வி.என். பாஸ்கர் உட்பட நான்கு பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதாரச் சிறப்பு நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உட்பட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018