மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

புகையில்லா போகி: மாணவர்கள் உறுதிமொழி!

புகையில்லா போகி: மாணவர்கள் உறுதிமொழி!

சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், புகையில்லாத போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சென்னை வெலிங்டன் சீமாட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா போகிப் பண்டிகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று(ஜனவரி 10) நடைபெற்றது.

அதில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, போகிப் பண்டிகையின்போது டயர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விளக்கமாகக் கூறினார்.

இதையடுத்து காற்று மாசுபாட்டை குறைக்க உதவும் வகையில் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாடுவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018