மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு?

வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு?

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

குஜராத்தில் மருத்துவம் படிக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரிராஜ் என்ற மாணவர் கடந்த 5ஆம் தேதி அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதற்குக் கல்லூரியில் நிலவிய சாதி பாகுபாடே காரணம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி ஜேஎன்யுவில் படித்த சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் மரணமடைந்தார். டெல்லி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த, திருப்பூர் மாணவர் சரவணன் கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதுபோன்ற வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள் மரணமடைவதும், தாக்கபடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது,

இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பித்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரானது, நாளையுடன் முடிவடையவுள்ளது. கூட்டத் தொடரின் நான்காம் நாளான இன்று ( ஜனவரி 11) எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதில், "வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018