மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் தொடக்கம்!

அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் தொடக்கம்!

தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை (TAEI) திட்டத்தின் கீழ் 29 படுக்கை வசதிகளுடன் கூடிய விபத்து காய மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட, இம்மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஜனவரி 10) தொடங்கிவைத்தார்.

“ஒவ்வோர் ஆண்டும், சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் உயிரிழக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும் மன உளைச்சலுக்கும் குடும்ப பொருளாதார நெருக்கடிக்கும் தள்ளப்படுகின்றன. தமிழக அரசு விபத்துகளைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் பல முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் ஒன்றாகக் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்காக விபத்து சிகிச்சை கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.

மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த விபத்து காய மற்றும் அவசர கால சிகிச்சை மையத்தில் 29 படுக்கைகள் அவசர கால மருத்துவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை நிறுவப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படும்.

விபத்தினால் அவசர சிகிச்சை தேவைப்படுபவரைக் காயத்தின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி விரைவாகச் சிகிச்சை அளிக்கப்படும். இத்தகைய விபத்து காய அவசர சிகிச்சை மையங்கள் வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை காண முடிந்தது. ஆனால், தற்போது ஜெயலலிதா அரசின் முயற்சியால் உலகத்தரம் வாய்ந்த இத்தகைய அவசர சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலதாமதமில்லாத வகையில் சிகிச்சை அளிப்பதன்மூலம் மதிப்புமிக்க மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018