மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

இஸ்ரோவின் தலைவராகும் தமிழர்!

இஸ்ரோவின் தலைவராகும் தமிழர்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த கே சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் தலைவராக உள்ள கே.என்.கிரண் குமாரின் மூன்றாண்டு கால பதவி வரும் ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து மத்திய பணியாளர் அமைச்சகம், இஸ்ரோவின் அடுத்த மூன்றாண்டுக்கான தலைவராக தமிழகத்தின் கே சிவனை நியமித்துள்ளது. இவர் தற்போது திருவனந்தபுரத்தின் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

சென்னை எம்ஐடியில் வானூர்திப் பொறியியல் (ஏரோனாட்டிக்கல்) முடித்து பின் பெங்களூருவில் பட்டப்படிப்பு பயின்றார். அதன் பிறகு நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பு குழுவில் 1982ஆம் ஆண்டு ராக்கெட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார் சிவன். இவரது மேற்பார்வையில் இந்தியா தனது 41வது பிஎஸ்எல்வி செயற்கோளை நாளை (ஜனவரி 12) விண்ணில் செலுத்தவுள்ளது. இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) புதிய தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் கே.சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக தமிழர் ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 3 ஆண்டுகள் தாமதமாக இந்தப் பொறுப்பு அவரது கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வல்லங்குமாரவிளை கிராமத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சிவன், கடந்த 1982ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களுக்கு பல்வேறு நிலைகளில் பங்களித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி ஏவுகலம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் அதிக முறை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததற்கும், ஒரே ஏவுகலத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் முக்கியப் பங்காற்றியவர் இவரே. இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்கவிருக்கும் அவர், செய்து முடிக்க ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. விண்வெளி ஆய்வுத் துறையில் இதுவரை எந்த நாடும் செல்லாத புதிய தடத்தில் பயணம் செய்து, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018