மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

விவசாய வாராக் கடன் 23% உயர்வு!

விவசாய வாராக் கடன் 23% உயர்வு!

2017ஆம் நிதியாண்டில் விவசாயத் துறையில் வாராக் கடன் அளவு 23 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

2016ஆம் நிதியாண்டில் ரூ.48,800 கோடியாக இருந்த விவசாயத் துறையின் வாராக் கடன் அளவு 2017ஆம் ஆண்டில் 23 சதவிகித உயர்வுடன் ரூ.60,200 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது விவசாயத் துறைக்கான வங்கிகளின் வாராக் கடன் ஒரு ஆண்டில் ரூ.11,400 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2012ஆம் நிதியாண்டு வாராக் கடன் அளவான ரூ.24,800 கோடியிலிருந்து 142.74 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே அதிகபட்சமாக 2017ஆம் ஆண்டில் தான் வாராக் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது. விவசாயத் துறையில் விவசாயிகளின் வாராக் கடன் அளவு வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. உள்கட்டுமானம் உள்ளிட்ட கார்பரேட் நிறுவனங்களுக்கான வாரக் கடன் அளவு தான் 20.83 சதவிகிதமாக உள்ளது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு மற்றும் சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி ஆகிய காரணங்களால் தான் வாராக் கடன் அளவு உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறுகிய மற்றும் நீண்ட கால காப்பீட்டுக் கடனானது 2017ஆம் ஆண்டு வரையில் மொத்த வாராக் கடனில் 8.3 சதவிகிதமாக இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற மொத்தக் கடனில் அவர்கள் திருப்பிச் செலுத்தாத கடன் ரூ.9.92 லட்சம் கோடியாகும். அதேநேரம், கார்பரேட் நிறுவனங்கள் திரும்பச் செலுத்தாத கடன் அளவு ரூ.26.8 லட்சம் கோடி. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதால் வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது. 2016ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொடங்கி 2017ஆம் ஆண்டில் பல்வேறு மாநிலங்கள் அறிவித்த கடன் தள்ளுபடி மட்டும் ரூ.1,30,000 கோடியாகும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018