மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

சிரியா: அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு!

சிரியா: அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிப்பு!

சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியைக் குறிவைத்து, நடத்தப்பட்ட தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த உள்நாட்டுப்போர் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடந்துவருகிறது. இந்தச் சண்டையின்போது ஏராளமான அப்பாவி மக்களும் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

இதுவரை இங்கு நடந்த உள்நாட்டுப் போரினால் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 25 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் பகுதியைக் குறிவைத்து நேற்று முன்தினம் (ஜனவரி 9) கடுமையான வான்வழித் தாக்குதல் நடைபெற்றது. மற்றொரு முனையில் பீரங்கிகளைக் கொண்டும் சுட்டுத்தள்ளினார்கள். இங்கு நடந்த பயங்கர தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018