மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

மூத்த தலைவர்களை மோடி சந்திப்பதில்லை!

மூத்த தலைவர்களை மோடி  சந்திப்பதில்லை!

இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து சிதைத்துவிட்டார்கள் என்று அண்மையில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவி வகித்தவருமான யஷ்வந்த் சின்ஹா அண்மையில் கடுமையாகச் சாடினார். இந்தியப் பொருளாதாரம் சரிவதாக பாஜக தலைவரே குற்றம்சாட்டியதை அடுத்து தேசிய அளவில் இதுபற்றி விவாதம் நடந்தது.

இந்நிலையில் இப்போது, “பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க மறுத்துவருகின்றனர். நான் மோடியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு 13 மாதம் ஆகிறது. கிடைக்காததால்தான் விமர்சனங்களைப் பொது வெளியில் வைக்கிறேன்’’ என்று நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சின்ஹா கூறியிருக்கிறார்.

“இன்று இருக்கும் பிஜேபி என்பது அடல் பிகாரி வாஜ்பாய் காலத்து பிஜேபி போன்றோ, அத்வானி காலத்து பிஜேபி போன்றோ இல்லை. இப்போது மூத்த தலைவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. அப்போதெல்லாம் கட்சியின் சிறிய பொறுப்பிலுள்ள சாதாரணமானவர்கள் எல்லாம் டெல்லிக்கு வந்து அப்பாயிண்ட்மெண்ட்டே இல்லாமல் அத்வானி அவர்களைச் சந்தித்துவிட முடியும். காரணம் கட்சியின் நிர்வாகிகளை அவ்வளவு மதித்தார்.

ஆனால் இப்போது கட்சியின் மூத்த தலைவர்கள் கூட பிரதமர் மோடியையோ, கட்சித் தலைவர் அமித் ஷாவையோ சந்திக்க முடிவதில்லை. நான் கட்சியின் முன்னாள் நிதியமைச்சர். பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக இந்த அரசின் நிலைப்பாடுகள் தொடர்பாக விவாதிக்க ஆலோசனை சொல்ல பிரதமர் மோடியை நான் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு 13 மாதங்கள் ஆகிறது. இன்னும் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018