மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

எட்டாவது நாள் போராட்டம்: எட்டாத தீர்வு!

எட்டாவது நாள் போராட்டம்: எட்டாத தீர்வு!

நீதிமன்ற உத்தரவையடுத்தும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் நேற்றிரவு அறிவித்துள்ளன. இதனால் போராட்டம் நிறைவடையும், பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு எட்டாக்கனியாக உள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றன. இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மனசாட்சியோடு முடிவு செய்து போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து ஒருசில மணி நேரத்தில் தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தற்போது போடப்பட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைத் திரும்ப பெற்றால் பணிக்குச் செல்ல தயார் என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகின.

ஆனால், போராட்டம் வாபஸ் பெறுவதாக எதுவும் அறிவிக்கவில்லை என்று தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார். “23 தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது. எங்களுடைய வாதத்தைச் சட்டப்படி நீதிமன்றத்தில் இன்று முன்வைக்கவுள்ளோம். இன்று நடைபெறும் விசாரணையை பொறுத்தே போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

பொதுமக்கள் மீது அக்கறை இல்லையா என்று தொழிற்சங்கங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். எங்களுக்குப் பொதுமக்கள் மீது அக்கறை உள்ளது அரசுக்குதான் இல்லை” என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இன்று வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில் மகிழ்ச்சி அடைந்திருந்த மக்கள் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்பால் கவலையில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தனியார் பேருந்துகளிலும் இரண்டு மடங்கு பணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று வழங்கப்படும் தீர்ப்பையடுத்து நல்ல முடிவுக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த தமிழகமும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018