மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

‘ஸ்கெட்ச்’ படத்துக்குச் சிக்கல்!

‘ஸ்கெட்ச்’ படத்துக்குச் சிக்கல்!

இருமுகன் பட வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஸ்கெட்ச்’. எஸ்.எஸ்.தமன் இசையில் விஜய்சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி இரு தினங்களுக்கு முன்பாக ஜனவரி 12 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் வெளியிடுகிறார்.

சூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’, பிரபு தேவா நடித்துள்ள ‘குலேபகாவலி’ ஆகிய இரு படங்களும் அதே நாளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் ஆயிரம் திரைகளே புதிய படங்களை ரிலீஸ் செய்து வசூல் எடுக்கக்கூடிய முக்கியத்துவம் உள்ள தியேட்டர்கள்.

மேற்படி மூன்று படங்களும் கதாநாயகர்களை முன்னிறுத்தும் படங்கள் என்பதால் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்வதில் கடும் போட்டி நிலவுகிறது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சேலம் ஏரியா (7G சிவா), நெல்லை ஏரியாக்களை (மணிகண்டன்) வாங்கியவர்களே ‘குலேபகாவலி’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளனர். இதனால் இந்த இரண்டு ஏரியாக்களிலும் மொத்தமுள்ள 200 தியேட்டர்களில் 80% தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

திருச்சி ஏரியாவில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கியவர் விநியோகஸ்தர் பரதன் (பரதன் பிலிம்ஸ்). இந்நிறுவனம் தயாரிப்பு, விநியோகம் மற்றும் திரையரங்குகளுக்கு பைனான்ஸ் செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பதால் அதிக தியேட்டர்களை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளது.

எஞ்சிய தியேட்டர்களில் குலேபகாவலி படத்துக்குப் பெரும்பான்மையான தியேட்டர்கள் கிடைத்துள்ளன. இதனால் ‘ஸ்கெட்ச்’ படத்துக்கு தியேட்டர்கள் மிக குறைவாக கிடைத்துள்ளன. திருச்சி நகரத்தில் மொத்தம் 11 தியேட்டர்கள் உள்ளன. இதில் தலா ஐந்தில் தானா சேர்ந்த கூட்டம், குலேபகாவலி படங்கள் ரிலீஸ் ஆகிறது. எஞ்சியுள்ள ஒரு தியேட்டரும் புறநகர் பகுதியில் இருப்பதால் நகருக்குள் ‘ஸ்கெட்ச்’ படத்தைத் திரையிட தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 11 ஜன 2018