மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

ஹெல்த் ஹேமா: தினம் ஒரு சத்து!

ஹெல்த் ஹேமா: தினம் ஒரு சத்து!

ஆரோக்கியமாகவும் நோயில்லாமலும் உடலைப் பாதுகாக்க பழ ரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துகளால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்தவேண்டிய உயிர்ச் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

திங்கள் – அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்னைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கவைக்கும். ரத்தச் சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களைக் குணப்படுத்தும். புற்றுநோய்க்கும் நல்ல மருந்து. கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டுவலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

இது ரத்தவிருத்தி மற்றும் ரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிச்சல் நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்றுவலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

புதன் – செம்பருத்தி

இரண்டு செம்பருத்தி பூ (மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனை வெல்லம், ஓர் ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

இதனால் பெண்களுக்குக் கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இதயநோய் போன்றவை நீங்கும். முகம் பொலிவு பெறும். ரத்த விருத்தி, ரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும். தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

வியாழன் – கொத்துமல்லி

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனை வெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைச்சுற்றல், நெஞ்செரிச்சல், எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

வெள்ளி – கேரட்

ஒரு கேரட் (உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய்த் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனை வெல்லம், ஓர் ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண் பெண் மலட்டுத் தன்மையைச் சரி செய்யும். கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரியாகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக கேரட் ஜூஸ் நல்ல மருந்து.

சனி – கரும்புச் சாறு

கரும்புச் சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

ஞாயிறு – இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

உடல் வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சி அளிக்கும். ரத்தக் குழாயில் தேங்கியிருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கும். பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுகள் இளநீரில் உள்ளன. ஜீரணச் சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018