நரேனின் அடுத்த படம்!


அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கும் நரகாசூரன் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த பட அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் நரேன் வெளியிட்டுள்ளார்.
நரேன் அறிமுகமான முதல் படத்திலேயே வலுவான கதைகளத்தோடு வெற்றிபெற்ற ‘துருவங்கள் பதினாறு’ ரகுமானின் திரைவாழ்வில் முக்கியமான படங்களில் ஒன்றாக அமைந்தது. தனது இரண்டாவது படத்தில் அரவிந்த்சாமியைக் கதாநாயகனாகக்கொண்டு நரகாசூரன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரேயா, ஆத்மிகா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு ரான் யோஹான் இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைய உள்ள நிலையில் படத்தை வருகிற பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.