மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு!

வாட்ஸப் வடிவேலு!

ஆம்புலன்ஸைப் பார்த்து வழி விடாதவன்கூட அரசு பஸ்ஸைப் பார்த்து வழி விடுறான்... டிரைவிங் அப்படி!

மரண பயத்தைக் காட்டிடானுங்க பரமா

‘போன பொங்கலுக்குப் பசுக்காகப் போராடின தமிழினத்தை இந்தப் பொங்கலுக்கு பஸ்ஸுக்காகப் போராட வெச்சிட்டானுங்களே’ என்கிறார் ஒருத்தர்.

அதுக்கு இன்னொருத்தர், ‘ஆமா... அது ‘காளை’யாச்சே... ‘பசு’ன்னு சொல்றீங்க... பசுவுக்காகவா போராடினோம்?’ன்னாரு.

யோவ்... எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருப்பீங்களாய்யா?

அடுத்து, ‘இந்தப் பக்க இசை எங்கிருந்து வருது’ன்னு ஒரு குரூப் கிளப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்குறாங்க.

யாரையாச்சும் எதையாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.

ஆனா, நம்பள மட்டும் யாரும் எதையும் சொல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. என்னய்யா உங்க நியாயம்?

எல்லாத்தையும் பண்ணிட்டு, நாலு பேருக்கு அன்னதானம் பண்ணினா, புண்ணிய நதியில நீராடினா சரியா போச்சுன்னு நினைச்சுக்கிட்டு என்ன செய்யணும், என்ன பண்றோம், என்ன கேட்கறோம்னே தெரியாம பல பேர் இருக்காங்க.

ஆனா, எல்லாரும் ஒரு விஷயத்துல ஒத்துமையா இருக்கோம். என்ன தெரியுமா?

“நமக்கு தெரிஞ்ச விஷயம்கூட மத்தவனுக்கு தெரியலையே... முட்டாளா இருக்காங்களே” - அப்படிங்கிற விஷயம். என்ன சரிதானே?

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டுப் பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தைப் பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றைக் கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே, ‘ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே... யாரேனும் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.

அந்த ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்துக் கடுமையாகப் போராடி அந்தப் பண மூட்டையை எப்படியோ மீட்டு எடுத்துக்கொண்டு வந்து கரையை அடைந்தான்.

பின், ‘இந்த பண மூட்டையைக் காப்பாற்ற சொல்லி யாரோ கதறுனீர்களே... நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று சத்தமாக அழைத்தான். ஆனால், வெகுநேரம் ஆகியும் யாரும் அதை பெற்றுக்கொள்ள வரவில்லை.

பிறகுதான் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பண மூட்டைக்குச் சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்பது. ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்தப் பண மூட்டைக்குப் பதிலாகத் தன்னைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்திருந்தால் இந்தப் பண மூட்டையை விடுத்து நான் அவரைக் காப்பாற்றி இருப்பேனே. ஆனால், அவர் இப்படி செய்துவிட்டாரே என்று அந்த மீனவன் வருந்தினான்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018