மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

தூக்கமின்மை: ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் இறப்பு!

தூக்கமின்மை: ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் இறப்பு!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் தூக்கமின்மையால் 3,500 குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் இறப்பு (SIDS), தற்செயல் மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் அமெரிக்காவில் 3,500 குழந்தைகள் இறந்துவருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் பிரெண்டா பிட்ஸ்ஜெரால்ட், “1990களில் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பான தூக்க விழிப்புணர்வு பிரசாரத்தினால் தூக்கமின்மையினால் ஏற்படும் இறப்புகள் குறைவாகவே இருந்தன. ஆனால், 1990க்குப் பிறகு குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தூக்கமின்மை காரணமாக இங்கு பல குழந்தைகளை இழந்துள்ளோம். அது தடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற தூக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ, அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவதைக் குறிக்கிறது. இந்த ஆய்வில் ஐந்து தாய்மார்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் குழந்தைகளைப் பக்கத்திலோ அல்லது வயிற்றை ஒட்டியோ படுக்கவைத்துக் கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், ஐந்துக்கு மூன்று தாய்மார்கள் குழந்தைகள் படுக்கும் இடத்தில் மட்டும் மென்மையான படுக்கையை அமைத்துக்கொள்வதும் தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 11 ஜன 2018