மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் தீவிரவாதிகள்: சித்தராமையா

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் தீவிரவாதிகள்: சித்தராமையா

பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் போன்றவற்றிலும் தீவிரவாதிகள் உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் இந்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், காங்கிரஸைத் தோற்கடித்து ஆட்சியமைக்க பாஜகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சித்து வருகின்றன. கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் சமீபத்தில் ட்விட்டரில் போட்டுக்கொண்ட வார்த்தை சண்டை இதற்குச் சிறந்த உதாரணம்.

இந்த நிலையில், சாம்ராஜ் நகரில் நேற்று (ஜனவரி 10) செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தளம், விஸ்வ ஹிந்து பரிஷத் அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் சமூகத்தில் அமைதியின்மையை உண்டாக்குவதைச் சகித்துக்கொள்ள முடியாது.

பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவையும் ஒருவகையில் தீவிரவாத / பயங்கரவாத இயக்கங்கள்தான். பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா ஆகட்டும். ஆர்எஸ்எஸ் அல்லது பஜ்ரங்தளம் ஆகிய இயக்கங்கள் ஆகட்டும்... தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த அரசு விட்டுவைக்காது” என்று குறிப்பிட்டார்.

‘இந்த இயக்கங்களைத் தடை செய்வதற்கு மத்திய அரசுக்கு ஏதாவது அறிக்கை அனுப்பப்படுமா?’ என்ற கேள்விக்கு, “அவர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதற்கான ஆவணங்களை நாங்கள் பெற வேண்டும்” என்று பதிலளித்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018