மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்!

எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்!

‘மக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்’ என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4 முதல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றுடன் போராட்டம் எட்டாவது நாளாக நீடித்து வருகிறது. பொங்கல் நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த கவுரவம் பார்க்கிறது என்று பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டி வரும்நிலையில், தாங்கள் கவுரவம் பார்க்கவில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாத நிலையில் ஏழு நாள்களாகப் போராட்டம் தொடர்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த அவல நிலைக்கு தமிழக அரசுதான் முக்கிய காரணம் என்றாலும் இந்தப் போராட்டத்தை தூண்டும் விதமாக வேறு எந்த இயக்கங்களும் செயல்படக் கூடாது.

மக்கள் நலன் கருதியும் தொழிலாளர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்படவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும். அதற்கு மாறாகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படக் கூடாது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 11 ஜன 2018