மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

கல்வி நிறுவன உணவுகளுக்கு ஜிஎஸ்டி!

கல்வி நிறுவன உணவுகளுக்கு ஜிஎஸ்டி!

கல்வி நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகளுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்கும் பணிகளுக்காகக் கல்வி நிலைய வளாகத்துக்குள்ளேயே உணவுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இத்தகைய உணவுக்கூடங்களை கல்வி நிறுவனங்களோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனங்களோ நடத்தி வருகின்றன. தனியார் கல்லூரிகளில் மாணவர்களிடம் உணவுக் கட்டணமும் தனியாகப் பெறப்படுகிறது.

இதுவரையில் இதற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாமல் இருந்த நிலையில், இனி 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய சுங்க மற்றும் கலால் வரி ஆணையம் (சி.பி.இ.சி) நேற்று (ஜனவரி 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கல்வி நிறுவனங்களில் செயல்படும் உணவு விடுதிகளில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிநீருக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு உள்ளீடு வரிக் கடன் ஏதும் இல்லை. கல்வி நிறுவனங்களில் சமைக்காமல் வெளியில் வாங்கி வந்து பரிமாறும் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 11 ஜன 2018