மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜன 2018

எரிபொருள் பயன்பாடு 7.5% உயர்வு!

எரிபொருள் பயன்பாடு 7.5% உயர்வு!

டிசம்பர் மாதத்துக்கான இந்தியாவின் எரிபொருள் தேவை (பயன்பாடு) 7.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 7.5 சதவிகித உயர்வுடன் 17.39 மில்லியன் டன்னாக இருந்தது. முக்கிய எரிபொருளான பெட்ரோல் விற்பனை 10.3 சதவிகித உயர்வுடன் 2.17 மில்லியன் டன்னாக உள்ளது. சமையல் எரிவாயு விற்பனை 6 சதவிகித உயர்வுடன் 2.06 மில்லியன் டன்னாகவும், நாப்தா எரிபொருள் விற்பனை 1.4 சதவிகித உயர்வுடன் 1.02 மில்லியன் டன்னாகவும் இருந்தது. சாலை அமைப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும் பிடுமன் எரிபொருள் விற்பனையும் 3.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2017-18 நிதியாண்டுக்கான எரிபொருள் பயன்பாடு 5.8 சதவிகித உயர்வுடன் 203.4 மில்லியன் டன்னாக இருக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தேவை குறைந்துவருகிறது. டிசம்பர் மாதத்தில் எரிபொருள் பயன்பாடு உயர்ந்திருந்தாலும் நடப்பு நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த எரிபொருள் பயன்பாட்டில் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது என்று கருதப்படுகிறது. முந்தைய நவம்பர் மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு 6.2 சதவிகித உயர்வுடன் 17.4 மில்லியன் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 11 ஜன 2018