மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

முடிவுக்கு வரும் போராட்டம்!

முடிவுக்கு வரும் போராட்டம்!

நீதிமன்ற அறிவுரையைத் தொடர்ந்து தொமுச தொழிற்சங்க ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கங்களின் போராட்டத்தின்போது பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக் கோரியும், அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுத்தரக் கோரியும் வழக்கறிஞர் பிரீத்தா என்பவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (ஜனவரி 10) நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் விஜயநாராயணன் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தவணை முறையில் வழங்கிவருகிறோம் என்று தெரிவித்தார்.

முதல் கட்டமாகப் பொங்கலுக்கு முன்பு ஊழியர்களுக்கு ரூ.750 கோடி வழங்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதித் துறையிடம் தற்போது பணம் இல்லாத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தொழிற்சங்கம் சார்பில், “தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் பணிக்குத் திரும்பத் தயார். இந்த வேலைநிறுத்தம்கூடக் கடைசிக் கட்ட போராட்டம்தான். பெரும்பாலான உறுப்பினர்களைக் கொண்ட சங்கங்களைப் புறக்கணித்துவிட்டுத் தமிழக அரசு போலி ஒப்பந்தத்தைச் செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி ஆறு மாதத்துக்குப் பிறகு போராட்டம் நடத்தலாமா என்று தொழிற்சங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்றியிருந்தால் போராட்டம் நடைபெற்றிருக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொது மக்களின் நலன் கருதி போக்குவரத்து ஊழியர்கள் ஆலோசனை நடத்தி பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தொழிற்சங்கங்களின் ஆலோசனை முடிவுகளை ஒரு மணி நேரத்திற்குள் உடனடியாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் அடையும் துன்பத்திற்கு நீதிமன்றம் கவலைப்படுவதாகவும் கூறினர்.

நீதிமன்ற அறிவுரையைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தியதில் தொமுச சங்க அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2.44 காரணி ஊதிய உயர்வைத் திரும்பப் பெற்றால் தற்காலிகமாக வாபஸ் பெற்றுப் பணிக்குத் திரும்ப தயார் என்று கூறியுள்ளதாகவும், இதர தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 10 ஜன 2018