மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

செங்கோட்டையனை முதல்வராக்கத் திட்டமிட்டோம்!

செங்கோட்டையனை முதல்வராக்கத் திட்டமிட்டோம்!

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 9 ) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கின் விசாரணை இன்றும் (ஜனவரி 10) தொடர்ந்தது.

இந்த விசாரணையின்போது, ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு மூத்த அமைச்சரான செங்கோட்டையனை முதலமைச்சராக்க நாங்கள் திட்டமிட்டோம்’ என்று தினகரன் தரப்பின் வழக்கறிஞரான ராமன் நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறார். இது அதிமுகவில் அடுத்த கட்ட வெடிப்பை விளைவித்திருக்கிறது.

நேற்று தனது வாதத்தை வைத்த முதல்வர் தரப்பின் வழக்கறிஞர் இன்று காலையும் வாதத்தைத் தொடர்ந்தார். இன்று பிற்பகல் மீண்டும் தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராமன் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

அப்போது நேற்று முதல்வர் தரப்பிடம் எழுப்பியதைப் போலவே இன்று நீதிமன்றம் தினகரன் தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

ஆளுநரிடம் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக புகார் அளித்தார்கள் என்று நீதிமன்றம் கேட்க, ‘’முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான எங்களின் அதிருப்தியை ஆளுநரிடம் தெரிவித்தோம்’’ என்று பதிலளித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன்.

அதற்கு நீதிமன்றம், ‘ஒரு முதல்வர் மீதான அதிருப்தியை தெரிவிப்பதற்கு ஆளுநர் எந்த வகையில் பொருத்தமானவர்?” என்று மீண்டும் கேள்வி கேட்டது.

‘’ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ, நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவற்காக ஆளுநரை சந்தித்துக் கொடுத்தோம்’’ என்றார் வழக்கறிஞர்.

‘’ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது அதிருப்தி என்றால் என்ன நோக்கம்?’ என்று மீண்டும் நீதிமன்றம் கேட்டது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர் ராமன்,

‘’ஆமாம்... முதல்வரை மாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டுத்தான் கொடுத்தோம். எங்கள் கட்சியிலேயே மூத்த அமைச்சர் செங்கோட்டையன் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக செங்கோட்டையனை முதல்வராக ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் ஆளுநரிடம் எங்கள் அதிருப்தியை தெரிவித்தோம்’’ என்று தெரிவித்தார் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞரான ராமன்.

சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி சென்ற டிடிவி தினகரன், அங்கே செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கடந்த 30 வருட அரசியலில் செங்கோட்டையன் மிக முக்கியமானவர், மூத்தவர். அவரை அவை முன்னவர் என்ற பதவியில் இருந்து அகற்றியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 10 ஜன 2018