ப்ளூவேல் விளையாட்டு: தமிழகத்தில் பாதிப்பு இல்லை!


தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் ப்ளூவேல் விளையாட்டு, ஆரம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது எந்த பாதிப்பும் இல்லை எனத் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.
இன்று(ஜனவரி 10) நடைபெற்ற சட்டமன்றத்தில், இணைய தளங்களில் சிலர் ஊடுருவிப் பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள். மேலும் இளைஞர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய இணைய தள ‘ப்ளூவேல்’ விளையாட்டைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று அதிமுக உறுப்பினர் செம்மலை கேள்வி எழுப்பினார்.
இதற்கு “ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதே இணைய தளங்களை பாதுகாக்க ‘இ-செக்கியூரிட்டி’ வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான இணைய தள பாதுகாப்பு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதற்காக ஒரு உயர் மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்பட்டு அறிவுரை வழங்கி வருகிறது. மேலும் இதையடுத்து 24 மணி நேர சைபர் செக்கியூரிட்டி கண்காணிப்பும் கொடுக்கப்படுகிறது.