மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

மனஉளைச்சலில் நடத்துநர் தற்கொலை!

மனஉளைச்சலில் நடத்துநர் தற்கொலை!

தென்காசியில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை கொண்டுள்ள சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்துப் பணிமனையில் செல்வம் (55) என்பவர் நடத்துநராகப் பணியாற்றிவந்துள்ளார். உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி செல்வத்தின் சொந்த ஊராகும். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட இவர் கடந்த 6 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வத்தலகுண்டு அருகே அச்சனம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு இன்று சென்றுள்ளார். அப்போது விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் உறவினர் வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே விஷம் அருந்தியுள்ளார். வீட்டுக்குச் சென்றதும் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விருவீடு காவல் துறை துணை ஆய்வாளர் கண்ணா வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.

ஊதிய உயர்வு வழங்காததால் தற்கொலை செய்து கொண்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறவுள்ளது.

இவர் கடந்த 30 ஆண்டுகளாகப் போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது இறப்பு போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 10 ஜன 2018