மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 ஜன 2018

பெரு நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளராக இந்தியா!

பெரு நாட்டின் சிறந்த ஏற்றுமதியாளராக இந்தியா!

2017ஆம் ஆண்டின் ஜனவரி - அக்டோபர் மாதங்களுக்கான பெரு நாட்டின் ஏற்றுமதியில் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி நடந்துள்ளதாகப் பெரு நாட்டின் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் ஜனவரி - அக்டோபர் மாதங்களில் பெரு நாட்டின் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி மதிப்பு 10.53 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நிலையில் 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு 15.59 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. சீனா, தென்கொரியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், ஹாங்காங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குப் பெரு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. இதில் குறிப்பாக இந்தியாவுக்கான ஏற்றுமதி 1.57 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2016ஆம் ஆண்டின் ஏற்றுமதி மதிப்பான 694 மில்லியன் டாலரை விட 126.78 சதவிகிதம் அதிகமாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 10 ஜன 2018